24 Mar 2020

மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் வைத்திய குழுவுக்கு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை பாராட்டு.

SHARE
(ஆனந்தன்)

மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் வைத்திய குழுவுக்கு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை பாராட்டு.
மட்டக்களப்பு மாவட்டத்தின் சிவில் சமூக அமைப்பினரும் அதன் போசகரான மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்களால் செவ்வாய்கிழமை (24) மட்டக்களப்பு மாவட்டத்தின் போதனா வைத்தியசாலையின் பணியாளர்களான வைத்திய நிபுனர்கள் வைத்தியர்கள் வைத்திய உதவியாளர்கள் தாதிய உத்தியோகத்தர்கள் தாதியர்கள் மருத்துவ மாதர்கள் மருந்தாளர்கள் மருத்துவ உதவியாளர்கள் ஊழியர்கள் சிற்றுழியர்கள் வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி கலாரஞ்சனி கனேசலிங்கம் மற்றும் நிருவாகத்தினர் ஆகியோரின் அற்பணிப்பு மிக்க தியாக சிந்தனை கருனை மிக்க பணியினை  மனதார உளம்கனிந்து பாராட்டினார்.

அற்பணிப்புடன் தங்களின் குடும்பம் குழந்தைகளை எல்லாம் மறந்து 24 மணித்தியாளமும் விடுதிகளில் தங்கியிருந்தும் தங்கள் பணியினை ஆற்றி வருகின்றனர் அவர்களுக்கான உணவுக்குகூட வீடுகளுக்கு  செல்ல முடியாதவர்களாக உள்ளனர் அதற்காக பணிப்பாளரின் சிறப்பான செயற்ப்பாட்டினால் அவர்களுக்குன உணவு. விடுதில் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது இதனைத் தவிரவும் புனர்வாழ்வு மத்திய நிலைத்தினுடாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்பு உணவுக்குத் தேவையான உதவியை வழங்கவும் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளதாக சிவில் அமைப்பின் உறுப்பினர் எஸ்.மாமாங்கராஜா தெரிவித்தார்.

நமது மக்களுக்கு முகக் கவசங்களை பாவிக்கும் படியாக சுகாதார தரப்பினர் பணிக்கின்ற போதும் அதனை சில மணி நேரம்கூட அணிவதற்கு தயாரில்லாதபோது இந்த அற்பணிப்பு மிக்க வைத்தியசேவையினை வழங்கிவருகின்ற வைத்தியர்களும் தாதியர்களும் பாதுகாப்பு அங்கியினை தொடர்ந்து 12 மணித்தியாலமாக அணிந்து கொன்டு தங்களின் கன்னியமான பணியினை தங்கள் உயிரையும் மதிக்காது சேவையாற்றுவது இறைவனுக்கு இணையான சேவை என மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்கள் பாராட்டி புகழ்ந்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: