மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடக்கூடாது - மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுப்பு.
மக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள், அறிவித்தல்கள் ஊடாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தல், பொது இடங்களில் கிருமி நாசினி விசுறுதல், வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்களை தனிமைப்படுத்தல், அவர்கள் தொடர்பான கண்காணிப்பு, ஒன்று கூடல்களை தவித்தல் போன்ற பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மகிழடித்தீவு வைத்தியசாலை வைத்திய அதிகாரி தி.தவனேசன் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி கலையரசி உள்ளிட்ட உத்தியாகத்தர்களும், பிரதேச செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும், காவல் துறையினர், பிரதேச சபை, பாதுகாப்பு படையினரும் இணைந்து இச்செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இச் செயற்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்குமாறும் குறித்த திணைக்களங்கள் கேட்டுக் கொள்வதுடன், சுகாதார திணைக்களத்தின் அறிவைத்தல்களுக்கேற்ப செயற்படுமாறும் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment