விளையாட்டு மாணவர் மத்தியில் நேர் சிந்தனை எண்ணங்களை தோற்றுவிக்கின்றது - பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பார் திருமதி.ந.புள்ளநாயகம்.
கல்வி அமைச்சினால் பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டுகள் ஆரம்பக் கல்வி மாணவர்களின் செயற்பாடு சார்ந்த கற்றல் நடவடிக்கைகளுக்கு உந்து சக்தியாக அமைவது மாத்திரமல்லாது பிள்ளைகளின் உடல் சார்ந்த செயற்பாடுகளுக்கும் நன்மையினை விளைவிக்கின்றது.
இஎன அண்மையில் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட துறைநீலாவணை சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் நடைபெற்ற சிறுவர் விளையாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்… சிறுவர் விளையாட்டுக்கள் ஆரம்பத்திலேயே மாணவர் மத்தியில் போட்டித் தன்மையினை தோற்றுவிக்கின்றது. மாணவர் மத்தியில் நேர்சிந்தனையினை உருவாக்குவதில் விளையாட்டு முக்கிய பங்கு வகிக்கின்றது. தமக்குள் இருக்கின்ற திறமையினை வெளிக் காட்டுகின்ற ஆடுகளமாக விளையாட்டு அமைகின்றது. இங்கு நடைபெற்ற விளையாட்டுக்களை நோக்குகின்ற போது அதிபர் ஆசிரியர்கள் காட்டுக்கின்ற முழுமையான ஒத்துழைப்பினால் கிடைத்த பாரிய வெற்றியை உணர்ந்து கொள்ள முடிந்தது. இப்பாடசாலையின் அதிபர் சுமார் எட்டு வருட காலமாக சேவையினை சிறப்பான முறையில் முன்னெடுத்து வருகின்றார். இவர் பல தடவைகள் இடமாற்றம் கேட்ட போதிலும் எனது ஆலோசனைக்கு அமைவாக இன்னும் சில வருடங்கள் சேவையாற்றுவதற்கு உடன்பட்டிருக்கின்றார். அவருடைய முகாமைத்துவச் செயற்பாட்டினை பல தடவைகள் அவதானித்திருக்கின்றேன். உண்மையில் 1 ஏ பி பாடசாலையினையும் வெற்றிகரமாக செயற்படுத்தும் திறன் அவரிடம் இருக்கின்றது.
பாடசாலையின் வரலாறு தொடர்பான விடயங்களை செயலாளர் தெளிவான முன்வைத்திருக்கின்றார். பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் என்ற வகையில் இப் பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் எனது பங்கு அதிகளவில் இடம்பெறும். முழுமை பெறாதுள்ள சுற்று மதிலுக்கு மிக விரைவாக ஐந்து இலட்சம் ஒதுக்கீடு செய்வதற்கு பொறியியலாளரிடம் பேசியிருக்கின்றேன் கட்டாயம் இப்பாடசாலையின் கல்வி முன்னேற்றத்திற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவேன். எனத் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment