6 Dec 2019

மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தினம்.

SHARE

மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தினம்.மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் இருந்து வருகை தந்த மாற்றுத்திறனாளிகள் தினம் நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் (ஒசாணம்) நிலையம் சத்துருக்கொண்டானில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இம்மாற்றுத்திறனாளிகளின் விழாவிற்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் கலந்து கொண்டு நிகழ்வுகளில் பங்கு கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பரிசுப் பொருட்களையும் சான்றிதல்களையும் வழங்கி வைக்கப்பட்டது.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி பல்கலை நிகழ்வுகளும் மாற்றுத்திறனாளின் திறமைகளை வெளிக்காட்டுகின்ற நிகழ்ச்சிகள் போன்றனவும் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இவ்விழாவினை மட்டக்களப்பு மாவட்ட உதவி  மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன் மற்றும் சமூக சேவைகள் திணைக்களமும் ,ஆரம்ப கைத்தொழில் சமூக வலுவூட்டல் அமைச்சும் இணைந்து இந்நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





SHARE

Author: verified_user

0 Comments: