7 Oct 2019

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 400 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் வே.மயில்வாகனம் தெரிவித்தார்.

SHARE
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 400 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் வே.மயில்வாகனம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் இம்முறை அதிகளவான மாணவர்கள் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு மாணவர்களின் வெற்றிக்காக உழைத்த ஆசிரியர்கள், அதிபர்கள், பெற்றோர்களுக்கு, நான் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தரப் பெண்கள் பாடசாலையில் பரீட்சைக்கு தோற்றிய 136 பேரில் 60 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தியடைந்துள்ளதாக கல்லூரியின் முதல்வர் திருமதி.கரணியா சுபாகரன் தெரிவித்தார். மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 53 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்திபெற்றுள்ளதாக அதிபர் பயஸ் ஆனந்தராஜா தெரிவித்தார். இக்கல்லூரியில் பாரதிராஜன் வட்சன்போல் எனும் மாணவர் 193 புள்ளிகளைப்பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் 52 மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள். மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் 29 மாணவர்களும், கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியில் 22 மாணவர்களும், கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயத்தில் 66 பேரும், சிவானந்தா தேசிய பாடசாலையில் 13 மாணவர்களும், ஆரையம்பதி இராமகிருஸ்ண மிசன் பாடசாலையில் 16 மாணவர்களும், கிரான்குளம் சரஸ்வதி வித்தியாலயத்தில் 9 மாணவர்களும், புதுக்குடியிருப்பு கண்ணகி வித்தியாலயத்தில் 6 பேரும், ஆரையம்பதி நொத்தாரிஸ் மூத்தம்பி வித்தியாலயத்தில் 8 மாணவர்கள் உட்பட 400 மாணவர்கள் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் சித்தியடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

SHARE

Author: verified_user

0 Comments: