மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும்இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை நிறைவேற்றுகையில் அதனைவிமர்சித்து பொய்யான போலியான இணையங்கள் மூலமும் சில பொது கூட்டங்களிலும் பிழையானமுறையில் விமர்சிக்கப்பட்டு வருவது அனைவராலும் அவதானிக்கப்படுகின்ற விடயமாகும். கடந்த காலங்களில் பல அவதுறான சொற்பிரயோகங்களால் திணைக்கள தலைவர்கள் பல சந்தர்ப்பங்களில் விமர்சிக்கப்பட்டிருந்தாலும்தற்போது நிருவாக ரீதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை புண்படுத்தும் வகையிலும்அவர் சார்ந்த கீர்த்திமிக்கசேவைக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையிலும் அதே போன்று பிரதேச செயலாளர் தொடர்பிலும் சிலஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் உண்மைக்குப்புறம்பான அவதூறுகள் மூலம் சேறு பூசும்நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதானது ஒரு எல்லை தாண்டிய செயற்பாடாக கவலை தருகின்றது. இவ்விடயத்தில் முறையாக செயற்பட வேண்டியசமூகப்பிரதிநிதிகள் ஓரிருவரும் மக்களை தவறாக வழி நடத்த முனைவதும் கவலைமிக்கதாகும். எனவே இவற்றைத் தொடர்ந்தும் அனுமதித்துக்கொண்டிருக்க முடியாது. என்ற அடிப்படையில் வெளியிடப்பட்ட விமர்சனங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக எதிர்வரும் 11 ஆந்திகதி புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் அனைத்து நிருவாக சேவைஉத்தியோகத்தர்களும் கறுப்பு பட்டியணிந்து எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளோம். அவலங்களுக்கும் சவால்களுக்கும் மத்தியில் பொதுமக்களுக்கு பொறுப்பு வாய்ந்த பணி புரியும் எமது உத்தியோகத்தர்களை மனதளவில் பாதிக்கின்றபோலிப்பிரச்சாரங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதுடன் தனிப்பட்டகோபதாபங்களையும் காழ்புணர்ச்சிகளையும் பொய்யான முக நூல்களில் பதிவிடும் எந்தவொருபதிவையும் நாம் கருத்தில் கொள்ளப்போவதில்லை. என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மட்டக்களப்புமாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் இலங்கை நிருவாக சேவை அதிகாரிகள் சங்கத்தின்மட்டக்களப்பு கிளையின் பிரதி தலைவருமான சுதர்சினி ஸ்ரீகாந், இலங்கை நிருவாக சேவைஅதிகாரிகள் சங்கத்தின் உதவிப்பதிப்பாசிரியர் ஏ.எம்.அல்அமீன் உட்பட அதன்உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
0 Comments:
Post a Comment