மட்டக்களப்பு நகர் பகுதியில் பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய கொள்ளைக் கோஷ்டியைச் சேர்ந்த 5 பேரை மைக்கிரோ ரக கைத்துப்பாக்கி ஒன்றுடன் செவ்வாய்க்கிழமை(24) நள்ளிரவு கைது செய்ததுள்ளதுடன் கொள்ளையடிக்க பயன்படுத்திய முச்சக்கரவண்டி ஒன்றும், மற்றும் கையடக்க தொலைபேசிகள் வீடு உடைக்கும் பொருட்களை மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிர்வாக பொறுப்பதிகாரி பி.எஸ்.டி.பண்டார தெரிவித்தார்.
இக் கொள்ளையர்கள் சம்பவதினமான செவ்வாய்க்கிழமை இரவு சத்துருக்கொண்டான் பகுதியில் வீடு ஒன்றை கொள்ளையடிப்பதற்காக முச்சக்கரவண்டியில் சென்றிருந்தனர். இந்த நிலையில் இவர்களை பொதுமக்கள் மடக்கிபிடித்து பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் இவர்களை ஒப்படைத்துள்ளார்கள்.
இதனையடுத்து மாவட்ட பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ்.சுமந்த தலைமையிலான குற்ப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டதில் கள்ளியங்காடு மயானத்துக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த மைக்கிரோ ரக துப்பாக்கினை மீட்டதுடன் 5 கையடக்க தொலைபேசிகள் முச்சக்கரவண்டி ஒன்றும், வீடுகளை உடைப்பதற்கான சுத்தியல் போன்ற கூரிய ஆயுதங்களை மீட்டெடுத்தார்கள்.
இதனை தொடர்ந்து குறித்த கைதுப்பாகியை கொள்ளையருக்கு விற்பனை செய்த கல்லடி கடற்கரை வீதியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்ததுடன், கொள்ளையர்கள் சம்பவதினம் கருவப்பங்கேணி ஊறணி பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை இரவு கொள்ளையிட திட்டம் தீட்டியுள்ளதாகவும், பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பங்குடாவெளி, கல்லடி, கள்ளியங்காடு போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் மற்றும் ஆயுதக்குழுக்களில் இருந்தவர்கள் எனவும் இவர்கள் களுவாஞ்சிக்குடி , செங்கலடி, மட்டக்களப்பு போன்ற பல பகுதிகளில் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் எனவும், தெரிவித்த பொலிசார்,
நீர்கொழும்பு மற்றும் களுவாஞ்சிக்குடி, செங்கலடி, மட்டக்களப்பு நீதிமன்றங்களில் கொள்ளை தொடர்பான வழக்குகள் இடம்பெற்றுவருவதாகவும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment