முதல் நிலை பெற்ற மாணவர்களையும் அதன் பொறுப்பு ஆசிரியர்களையும் பாராட்டும் நிகழ்வு திங்கட்கிழமை (08) காலை புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையில் பாடசாலை அதிபர் அருட்சகோதரி எம்.சாந்தினி தலைமையில் நடைபெற்றது.
இதன் அடிப்படையில் கோட்டம், வலயம், மாவட்டம், மாகாணம் ஆகிய மட்டங்களில் பங்குபற்றி இப்பாடசாலை மாணவிகள் பல போட்டிகளில் முதல் இடங்களைப் பெற்றுள்ளனர்.
இதில் தனி இசை, குழு இசை, பா ஓதல், நாட்டிய நாடகம், இலக்கிய நாடகம் ஆகிய போட்டிகளில் முதன் நிலையினைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற அகில இலங்கை தமிழ்மொழித் தினப்போட்டியில் 5 போட்டிகளில் முதல் இடங்களைப் பெற்று புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை மாவட்டத்தில் முதன்நிலையினை பெற்றுள்ளது. இதன்போது பாடசாலை பிரதி அதிபர், ஆரிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
0 Comments:
Post a Comment