14 May 2019

அஜந்தன் விடுதலையாவதற்கு முன்னர் குரல் கொடுக்காதவர்கள், அவரின் விடுதலை அறிவிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளார்கள்.

SHARE
கடந்த 2018.11.30 ஆம் திகதி வவுணதீவில் இரண்டு பொலிசார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்பு படுத்தி சந்தேகத்தின்போரில் கைது செய்யப்பட்ட அஜந்தன் என்பவரின் விடுதலை சம்மந்தமாக எங்களுடைய உத்தியோகபூர்வ விடயத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். எங்களுடைய அமைப்பின் பிரதிநிதியான அஜந்தன் என்பவர் பயங்கரவாதப் பிரிவினாரால் கைது செய்யப்பட்டு. கடந்த ஐந்தரை மாதங்களாக பல இன்னல்களை எதிர்கொண்டு வந்துள்ளார். இதனைவிட இவரது குடும்பம், இவரது மனைவி பிள்ளைகள் மிகவும் பல இன்னல்களுக்குள் கடந்த ஐந்தரை மாதங்கள் இருந்துள்ளார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றோம். 
என தேசத்தின் வேர்கள் அமைப்பின் தலைவர் க.பிரபாகரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள வொய்ஸ் ஒவ் மீடியா காரியாலயத்தில் செவ்வாய்கிழமை(14) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

எந்துவித குற்றமும் செய்யாத நிலையில் இவர் சிறையில் அடைக்கப்பட்டபோது, இவரது மனைவி பிள்ளைகளுடன் தனது கணவனான அஜந்தனை விடுதலை செய்யுமாறு கோரி வீதியில் உட்காந்திருந்தது யாவரும் நேரில் கண்ட உண்மை. அது ஒரு துன்பகரமான சம்பவமாகும். ஆஜந்தனின் குடும்பம் இவ்வாறு வீதியில் இறங்கி போராடிய போது அரசியல்வாதிகளினாலோ, அல்லது எந்தவொரு அமைப்புக்களினாலோ எதுவித ஆதரவும் அற்ற நிலையில் மிகவும் வறுமையிலும், ஒரு கஸ்ட்டமான நிலையிலும் அவர்கள் இருந்தார்கள். 

தற்போது அஜந்தன் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார். இன்று (செவ்வாய்கிழமை -) நீதிமன்றத்தினால் எதுவித நிபந்தனைகளுமின்றி பரிபூரணமாக விடுதலை செய்யப்பட்டுள்ளார். வவுணதீவு பொலிசாரின் கொலைக் குற்றத்தை வேறு நபர்கள் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் தற்போது அஜந்தன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். வவுணதீவுப் பொலிசாரிடமிருந்த எடுத்துச் செல்லப்பட்ட அயுதங்கள்கூட மீள இராணுவத்தினரால் கைப்பற்றப் பட்டுள்ளன.  

அஜந்தனின் விடுதலை தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சம்மந்தன் ஐயா ஆகியோர்,  ஜனாதிபதியிடம் கோரிக்கை முன் வைத்திருந்தனர். இந்நிலையில் அஜந்தனின் விடுதலை தொடர்பில் உறுதிப்டுத்தப் படுத்தப்படுவதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில்கூட ஒரு தடவையேனும் இவரின் விடுதலை குறித்துப் ஏன் பேசவில்லை என கேட்கின்றேன். அஜந்தன் குற்றமற்றவர் என நாங்கள் பல வழிமுறைகளில் பல தடவைகள் நாங்கள் எமுத்துக்கூறியிருந்தோம். அப்போதுகூட நீங்கள்கூட எங்களை ஒரு சந்தேகக் கண்ணோடுதான் பார்த்தீர்கள். ஆனால் இன்று உங்களுடைய நோக்கங்களுக்காக இவரின் விடுதலை குறித்து ஜனாதிபதியிடம் கூறியதாக, பின்னர், கடிதம் அனுப்பியதாகவும், அறிகின்றோம். இது எமக்கு ஒரு நல்ல விடையமாக தெரியவில்லை.  அஜந்தனின் விடுதலை உறுத்திப்படுத்த முன்னர், அல்லது நாம் அவரின் விடுதலைக்காகப் போராட்டம் நடாத்தியபோதாவது, அல்லது அவரது விடுதலை உறுத்திப்படுத்த முன்னர் அரசியல்வாதிகளாதகிய நீங்கள் இதனை செய்திருந்தால் அதனை நாங்கள் ஏற்றுக் கொண்டிருப்போம். 

இருப்பினும் அரசியல்வாதிகளாகிய உங்களிடம் ஒரு வேண்டுகோளை முன்வைக்கின்றோம். அஜந்தன் கடந்த ஐந்தரை மாதங்களாக ஒரு உளவியல் ரீதியான பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றார். உங்களால் முடியுமானால் இந்த அரசாங்கத்திடமருந்து இவருக்குரிய இழப்பீட்டைப் பெற்றுக்கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிக்றோம். அத்தோடு இன்னும் பல அரசியல் கைத்திகள் சிறையில் வாடுகின்றர்கள், அவர்களுக்காகவும் மக்கள் பிரதிநிதிகள் குரல் கொடுக்க வேண்டும். இது தொடர்பிலும் நீங்கள் ஜனாதிபதியிடம் கதைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றோம். 

நாட்டில் போராட்டங்கள் இடம்பெற்று கடந்த பாத்து வருடங்களாக நாட்டில் ஒரு சுமுகமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தபோது அண்மையில் இன்பராசா எனும் ஒரு நபரால் முஸ்லிங்களிடம் ஆயுதங்கள் இருக்கின்றன அதுபற்றி ஆராயுங்கள் என சொல்லிக் கெண்டிருந்தார். அவரது கருத்தை யாரும் கவனத்தில் எடுக்கவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரிய விடையம். இந்நிலையில் அண்மையில் நாட்டில் ஒரு பயங்கரவாத செயல் இடம்பெற்றிருகின்றது. 

அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களுடன் தொடர்பு பட்டவர்கள் ஐஎஸ். ஐஎஸ். தீவிரவாதிகள் என்பiது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் எமது அமைப்பின் உறுப்பினர் அஜந்தன் இறந்த ஆத்மாக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வை அவர் முன்னின்று செயலாற்றியதன் காரணமாகவும், ஒரு முன்னாள் போராளி என்ற காரணத்தினாலும்தான் அஜந்தன் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் இந்நாட்டில் ஏற்படும் கலவரங்களுக்கு ஐஎஸ்.ஐஎஸ் தீவிரவாதிகள் செயற்பட்டிருப்பதால் இனிவரும் கலங்களில், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் முன்னாள் போராளிகள் மீது குற்றம் சாட்டுவதையோ, அரசாங்கமும், அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், தயவு செய்து இதனைக் கருத்தில் கொள்ளவேண்டும்.  இவ்வாறான கொடூரமான செயற்பாடுகளை நிற்சயமாக முன்னாள் போராளிகள் செய்யமாட்டார்கள் என்பதை நாங்கள் ஆணித்தரமாக கூறி வைக்க விரும்புகின்றோம். 

அஜந்தன் சிறையில் இருந்தபோது மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சிரேஸ்ட்ட சட்டத்தரணி இரத்தினவேல் அவர்கள் உள்ளிட்ட குழுவினர் மிகுந்த சிமத்தின் மத்தியில் செயற்பட்டிருந்தார்கள் அவர்களுக்கும், அஜந்தனின் குடும்ப பொருளாதாரத்திற்கு உதவிய அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். என அவர் தெரிவித்தார். இதற்போது  தேசத்தின் வேர்கள் அமைப்பின் பிரதிநிதி ஆர்.சஸீஸ்வரன், மற்றும் விடுதலை செய்யப்பட்ட அவ்வமைய்பின் அஜந்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.


SHARE

Author: verified_user

0 Comments: