10 Apr 2019

போதைப் பொருள் பாவனைக்கு எதிராக போரதீவுப்பற்றுப் பிரதேச சபை உத்தியோகஸ்த்தர்கள் ஆர்ப்பாட்டம்.

SHARE
அநாதரவான நிலையில் நிழல் மரங்களின் அடியிலும் மத வழிபாட்டு இடங்களிலும் காலங்கழிக்கும் முதியோருக்கு அபயக் கரம் நீட்டுமாறு ஆளுநரிடம் வேண்டுகோள்
வாகரைப் பிரதேசத்தில் அநாதரவான நிலையில் மர நிழல்களிலும் மத வழிபாட்டு இடங்களிலும் காலங்கழிக்கும் முதியோருக்கு அபயக் கரம் நீட்டுமாறு கிழக்கு மாகாண  ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக வாகரை பிரதேச முதியோர் சம்மேளன பொதுச் செயலாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம் தெரிவித்தார்.இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை 10.04.2019 கருத்தக் கூறிய குருகுலசிங்கம் மேலும் தெரிவித்தாவது,
வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள முதியோர் கடந்த கால யுத்தத்தினாலும் இயற்கை இடர்களினாலும் பாதிக்கப்பட்டு தற்போதுவரை இன்னல்களைச் சந்தித்து வருகிறார்கள். இந்த விடயங்கள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளோம்.
பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோரும் தமது அன்றாட உணவுக்காக கையேந்துவதோடு அவர்கள் நிம்மதியாக கால்நீட்டி கண்ணயர்ந்து உறங்குவதற்குக் கூட ஒரு அமைதியான இடமின்றி அலைந்து திரிகின்றார்கள்.
வாகரைப் பிரதேசத்தில் அநாதரவான இத்தகைய முதியோர் சுமார் 50 பேர், தமக்கு அபயமளிக்கும் இடங்களாக நிழல்தரும் மரங்களும், மத வழிபாட்டிடங்களும் உள்ளன.
ஆனால், மழை, வெள்ளம், குளிர் வெயிற் காலங்களில் இவர்களது நிலைமை பரிதாபகரமானதாக உள்ளது.
அதனால்,  இத்தகைய முதியோருக்கு ஆற்றுப்படுத்தல் பராமரிப்புக்கள் தேவைப்படுகின்றன. எனவே, முதியோர் பராமரிப்பு இல்லமொன்றின் தேவை வாகரையில் உணரப்பட்டுள்ளது.
தங்களது அந்திம காலத்தில் ஆறுதலை எதிர்பார்க்கும் அநாதரவான முதியோருக்கு ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அபயக் கரம் நீட்டும் திட்டங்களுக்கு ஆதரவளிப்பார் என நம்புகின்றோம்” என்றார்.
 

SHARE

Author: verified_user

0 Comments: