மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு கிழக்கு மாகாணசபை உள்நாட்டு அமைச்சினூடாக முதன்மை விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் நான்கு பிரிவுகளில் மாகாணசபை உள்நாட்டு அமைச்சினூடாக சிறப்பாக தமது செயற்றிட்ட பணிகளை மேற்கொண்ட வைத்தியசாலைகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளை கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் திருகோணமலையில் நடைபெற்ற போதே இவ்விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலை இ.சுகாதார அட்டை (இ.கெல்த் கார்ட்) செயற்றிட்டத்தினை சிறப்பாக செயற்படுத்தியமைக்காக இவ்விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் ஐந்து வைத்தியசாலைக்கு முதன்மை விருதுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் நான்கு வைத்தியசாலைகள் ஆதார வைத்தியசாலைகள் என்பதுடன், மகிழடித்தீவு வைத்தியசாலை மாத்திரமே பிரதேச வைத்தியசாலை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்ஸார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக பங்கேற்று முதன்மை வைத்தியசாலைகளுக்கும், சாதனையாளர்களுக்கும் விருது வழங்கி வைத்துள்ளார்.
0 Comments:
Post a Comment