எனது ஆளுநர் காலத்தில் தமது சொந்த இடங்களிலேயே அரச அதிகாரிகள் கடமையாற்ற வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு. கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தில் காணப்பட்ட தொழிநுட்ப உதவியாளர் நியமனங்கள் வழங்கிவைப்பு.
கிழக்கு மாகாணத்தில் விவசாய திணைக்களத்தில் காணப்பட்ட 12 தொழிநுட்ப உதவியாளர் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு திருகோணமலை மற்றும் அம்பாறை போன்ற மாவட்டங்களில் விவசாய திணைக்களத்தில் காணப்பட்ட தொழிநுட்ப உதவியாளர் நியமனங்களை நிரப்பும் வகையில் நடாத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் சித்தி பெற்ற 12பேருக்கான நியமனங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இடம் பெற்ற வைபவத்தில் கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் எம்.வை.சலீம் உள்ளிட்ட கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் உயர் அதிகாரிகள் கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் அதிகாரிகள் என பலரும் பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment