10 Mar 2019

கட்டிட நிர்மாண பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கியதில் மேசன் தொழிலாளி ஸ்தலத்திலேயே பலி

SHARE
கட்டிட நிர்மாண பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கியதில் மேசன் தொழிலாளி ஸ்தலத்திலேயே பலி
கட்டிட நிர்மாண வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கியதில் இளம் குடும்பஸ்தரான மேசன் தொழிலாளி ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

புதிய காத்தான்குடி -01, பதுரியா பகுதியில் சனிக்கிழமை 09.03.2019 பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் புதிய காத்தான்குடி-02, மீன்பிடி இலாகா வீதியை அண்டி வசிக்கும் ஒரு பிள்ளையின் தந்தையான முஹம்மது அனீஸ் (வயது 29) என்பவரே பலியாகியுள்ளார்.

அக்கரைப்பற்றைச் சேர்ந்த இவர் காத்தான்குடியில் திருமணம் முடித்து அங்கேயே தொழில் புரிந்து வசித்து வந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மின்சாரத்தைத் தாங்கிச் செல்லும் கம்பிகள் மிக நெருக்கமாக உள்ள கட்டிடத்தில் வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது இவர் மீது மின்சாரம் தாக்கியதில் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம்பற்றி காத்தான்குடிப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: