1 Mar 2019

மட்டக்களப்பு விமான நிலையத்தில் செரண்டிப் ஏயார்வைஸ் நிறுவனம் தனது இரண்டாவது உள்நாட்டு பயணிகள் விமான சேவையை ஆரம்பித்தது

SHARE
மட்டக்களப்பு வவுனதீவு  விமான நிலையத்தில் செரண்டிப் ஏயார்வைஸ் நிறுவனம் தனது இரண்டாவது உள்நாட்டு பயணிகள் விமான சேவையை ஆரம்பித்தது.இவ்விமான சேவை கொழும்பு - மட்டக்களப்பு ஆகிய இடங்களுக்கு சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று இடம் பெற்றது.
இதில் கிழக்கு ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் இந்த விமானசேவையை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

இந் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி , மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்கள், செரன்டிப் ஏயார்வைஸ் நிறுவன தலைவர் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.

இந்த விமான சேவை திங்கள் ,புதன்,வெள்ளி ஆகிய தினங்களில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.





SHARE

Author: verified_user

0 Comments: