27 Feb 2019

சோறு தொண்டைக் குழியில் சிக்கி சிசு மரணம்

SHARE
சோறு தொண்டைக் குழியில் சிக்கியதன் காரணமாக 21 மாத வயதைக் கொண்ட ஆண் சிசுவொன்று மரணித்து விட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கிரான் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவின் கீழ் வரும் பாலையடித்தோணா கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் நீஷான் என்ற குழந்தையே செவ்வாய்க்கிழமை 26.02.2019 இவ்வாறு உயிர் நீத்துள்ளது.
வழமை போன்று உணவு உட்கொண்டிருந்த குழந்தை விக்கல் ஏற்பட்டதன் காரணமாக அவஸ்தையுற்று சற்று நேரத்தில் குழந்தை அசைவற்றுக் காணப்பட்டுள்ளது.

பெற்றோர் குழந்தையை அருகிலுள்ள சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோதும் குழந்தை ஏற்கெனவே உயிர் பிரிந்திரிந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் பற்றி பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: