16 Jan 2019

முதியோர் இல்லத்தில் பொங்கல் கொண்டாடி நெகிழ்ச்சியை ஏற்படுத்திய இளைஞர்கள்

SHARE
இருபத்தியோராம் ஆண்டிலே பயணித்துக் கொண்டிருக்கும் நாம் நவீன யுகத்திலே தடம்பதித்துக் கொண்டிருக்கும் காலத்தில் மனிதர்களிடைய அன்பு மனிதாபிமானம் குறைவடைந்து சில இளைஞர்கள் மத்தியில் 
மது, போதைப்பொருள் பாவனை, சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாதல் ஆகியன மேலோங்கியிருக்கும் நிலையில் தை பிறந்தால் வழிபிறக்கும் என்பதற்கு அமைய முதியோர்களினுடைய வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்தி முதியோர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டுமென்பதற்காக களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள நந்தவனம் முதியோர் இல்லத்தில் தைப் பொங்கல் விழாவை புதன்கிழமை (16) அப்பகுதி இளைஞர்கள் கொண்டாடியது அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த சில நாட்களாக களுவாஞ்சிகுடி பிரதேசம் சீரற்ற காலநிலையால் மிகுந்த வெள்ள நிலமையில் காணப்பட்டாலும் ஒவ்வொருவரும் தத்தமது வீடுகளில் பொங்கல் நிகழ்வினை கொண்டாடிக் கொண்டிருந்த வேளை களுவாஞ்சிகுடி நியூ ஒலிம்பிக் விளையாட்டு கழகத்தின் தலைவர் ந.புருஷோத்மன் தலைமையில் கழகத்தின் இளைஞர்கள் பொங்கல் விழாவினை களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள நந்தவனம் முதியோர் இல்லத்தின் வெள்ள  நிலமையினை சீர் செய்து துப்பரவு செய்து முதியோர்களுக்கு புத்தாடை அணிவித்து முதியோர்களாலே பொங்கல் பொங்கி இறை வழிபாடுகளை மேற்கொண்டு முதியோர்களை மகிழ்ச்சிப்படுத்தும் முகமாக கலை நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்து நடாத்தியதுடன் அவர்களுடன் இருந்து மதிய உணவு உண்டு பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தமை சிறப்பம்சமாகும்.

இந் நிகழ்வில் களுவாஞ்சிகுடி முகாமை ஆலய பரிபாலன சபை தலைவரும் நந்தவனம் முதியோர் இல்ல தலைவரும் கிராம தலைவருமான அ.கந்தவேள், மாணிக்கப்பிள்ளையார் ஆலய குரு சிவ ஸ்ரீ.மு.அங்குசன் குருக்கள், வைத்தியட்சகர் டாக்டர்.ப.சதீஸ்குமார், திட்டமிடல் பணிப்பாளர் த.சசிகுமார், பாடசாலை அதிபர்கள் மற்றும் கழக உறுப்பினர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தகது.





SHARE

Author: verified_user

0 Comments: