16 Jan 2019

தனியார் பஸ் மோதியதில் குடும்பஸ்தரான கூலித் தொழிலாளி பலி

SHARE

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின்  சித்தாண்டிப் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை 15.01.2019 இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தரான கூலித் தொழிலாளியொருவர் பலியானதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் சித்தாண்டி, உதயன்மூலை மதுரங்காட்டுக் கொலனியைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான பொன்னம்பலம் தியாகராசா (வயது 54) என்பவரே பலியாகியுள்ளார்.

இவர் பிரதான வீதியால் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தபோது தூரப் பிரதேச போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பஸ்ஸினால் மோதுண்டுள்ளார்.

உதவிக்கு விரைந்தவர்கள் படுகாயமடைந்தவரை சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோதும் ஏற்கெனவே அவரது உயிர் பிரிந்து விட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

விபத்தை உண்ணடாக்கிய பஸ்ஸைக் கைப்பற்றியுள்ள ஏறாவூர் பொலிஸார் சாரதியைக் கைது செய்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: