1 Jan 2019

மட்டக்களப்பு மாநகர சபையின் 2019 புது வருட கடமைப் பணிகளின் ஆரம்ப நிகழ்வு

SHARE
புதுவருடத்தை முன்னிட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சுற்று நிருபத்திற்கமைவாக, மட்டக்களப்பு மாநகர சபையின் புது வருடத்திற்கான அலுவலுக பணிகளின் ஆரம்ப நிகழ்வு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் செவ்வாய்கிழமை (01.01.2019) இடம்பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக மாநகர முதல்வரால் தேசிய கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன் பின் நாட்டின் சமாதானத்திற்காக உயிர் நீத்த படை வீரர்களுக்காக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி இடம்பெற்றது.

தொடர்ந்து அலுவலுகப் பணிகளுக்கான உறுதிமொழி  மாநகர சபையின் பிரதி ஆணையாளர் என். தனஞ்சயனால் வாசிக்கப்பட்டு ஊழியர்களால் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில், மட்டு மாநகர சபை ஆணையாளர் கே. சித்திரவேல், பிரதி முதல்வர் எஸ். சத்தியசீலன் மாநகர சபையின் உறுப்பினர்கள் கணக்காளர் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர். ‪

SHARE

Author: verified_user

0 Comments: