மே 18 முள்ளிவாய்க்கால்
தமிழ் இன அழிப்பின் நினைவேந்தல் நிகழ்வு
புலம்பெயர் தமிழர்களால் லண்டன் பிரதமர் மாளிகையின் முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. ஈழத்தமிழினத்தினை அழிவுக்கு இட்டுச் சென்ற
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பல்லாயிரக்கக்கணக்கான ஈழத்தமிழர்களின் கண்ணீராதனைகளுடனும் ஏக்கம் கலந்த உணர்வுகளுடனும் இடம்பெற்றது.
இந்நாள் உலகத்தமிழர்களின் தேசிய துக்க நாளாகவும்,ஈழத்தமிழின அழிப்பு நாளாகவும் மே 18 பிரகடனப்படுத்தப்பட்டது.
ஏனைய நாடுகளில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு அந்த நாடுகள் நீதியை வழங்கியுள்ள நிலையிலும் இலங்கையில் நடைபெற்ற தமிழின இனப்படுகொலைக்கு இதுவரையில் எந்தவித விசாரணையோ அல்லது கவலையோ தெரிவிக்கப்படவில்லையெனவும இங்கு கவலை தெரிவிக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் முடிந்த முடிவாகவே இருக்கவேண்டும் என்பதே தவிர அவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாமையை அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டும் எனவும் இங்கு வேண்டுகோள்விடுக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment