23 May 2018

ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டுதலில் மட்டக்களப்பில் விளையாட்டு மற்றும் உடல் நல மேம்பாட்டு தேசிய வார நிகழ்வுகள்

SHARE
ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய ஜனாதிபதி செயலகத்தின்   வழிகாட்டுதலில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில்   விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டு தேசிய வார நிகழ்வுகள் புதன்கிழமை (23) காலை நடைபெற்றன.
மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் இன்று காலை மாவட்ட செயலக வளாகத்தில் செயலக பணியாளர்களுக்கு விசேட உடல் நல பயிற்சிகள் நடாத்தப்பட்டன.

விளையாட்டுத் திணைக்களத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இந்த உடல் நல பயற்சியின் போது அரச பணியாளர்கள் நாளாந்தம் இலகுவாக மேற்கொள்ளக்கூடிய பயிற்சி முறைகள் விளையாட்டு அதிகாரிகளால் பயிற்றுவிக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன. இப் பயிற்சி நிகழ்வுகளை மண்முனை வடக்கு பிரதேச  விளையாட்டு உத்தியோகத்தர் ரி.பிரசாத் நெறிப்படுத்தினார்.

இந்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன்,மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, மாவட்ட விளையாட்டு அதிகாரி வி.ஈஸ்பரன், மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.வை.ஆதம்லெப்வை உள்ளிட்ட பெருமளவு ஆண், பெண் பணியாளர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்த உடல் நல தேசிய வார நிகழ்ச்சித்திட்டங்களை ஒட்டியதாக இவ்வாரம் அரச திணைக்களங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், மத ஸ்தாபனங்கள் மற்றும் பொது நல அமைப்புக்கள் இம் மாவட்டத்தில் இளைஞர் யுவதிகள், முதியோர்கள், சிறுவர், பெண்கள், மதத் தலைவர்களுக்கு விளையாட்டு, தொற்றா நோய்த் தடுப்பு விழிப்புணர்வு செயலமர்வுகள் மற்றும் உடல் நல போசாக்கு நிகழ்ச்சித்திட்டங்களை அமுல் நடத்தவிருப்பதாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடகப்பிரிவுத் தகவல் தெரிவிக்கின்றது.

இங்கு கருத்துரை வழங்கிய மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார்,

அரச பணியாளர்கள் உடல்நலப் பயிற்சிகள் பெற்றுக்கொண்டு கடைமையில் ஈடுபடுதல் உடல் ஆரோக்கியத்துடன் மக்களுக்கு மன அளுத்தங்களின்றி சிறந்த  பணிகளைச் செய்யலாமென்பது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்  எதிர்பார்பாகும். எனவே எதிர்காலத்தில் அரசபணியாளர்கள் வேலைப்பழுக்களுக்களுக்கு மத்தியிலும் உடல் நல நலபயிற்சிகளில் ஆர்வம் காட்ட வேண்டும் எனக்குறிப்பிட்டார்.





SHARE

Author: verified_user

0 Comments: