20 Apr 2018

தமிழ் சிங்கள புத்தாண்டு விழா - 2018

SHARE
23ஆவது கட்டளை த்தலைமையகத்தின் ஏற்பாட்டில் பொது மக்கள் மற்றும் இராணுவம் இணைந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(22) மட்டக்களப்பு சித்தாண்டியிலுள்ள வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் தமிழ் சிங்கள புத்தாண்டு விழா - 2018 நடைபெறவுள்ளது. 
காலை 8 மணிமுதல் பிற்பகல் 2.30 மணிவரை நடைபெறவுள்ள இவ் விளையாட:டு விழாவில், ஆண் பெண்களுக்கான சைக்கிள் ஓட்டம், மரதன், கயிறு இழுத்தல் அழகு ராணிப் போட்டி, அழகு ராஜா போட்டி, மற்றும் பாரம்பரிய விளையாட்டுக்களும் நடைபெறவுள்ளன.

இவ் விழாவில், பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி சந்துஸ் பனன்வெல்ல, மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் என்.மணிவண்ணன், பொலிஸ் உயர் அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர். 

SHARE

Author: verified_user

0 Comments: