20 Apr 2018

மாங்காடு பிரதான வீதியில் பாரிய விபத்து.

SHARE
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள மாங்காடு கிராமத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் பாரிய காயங்களுக்குள்ளாகி வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர். 
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதவதாவது….

வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் களுவாஞ்சிகுடி பகுதியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த டொல்பின் ரக வேனும், கோழிகளை ஏற்றிக் கொண்டு மட்டக்களப்பு பகுதியிலிருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த லொறி ஒன்றும் நோருக்கு நேர் மோதியுள்ளது. 

இதனால் வேன் சரிந்து விழுந்துள்ளதுடன் வேனின் மேல் அருகிலிருந்த மின்கம்பம் ஒன்றும் முறிந்து விழுந்துள்ளது. இந்நிலையில் வேனில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் ஓந்தாச்சிமடம் கிராமத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ராஜரெட்ணம் தினேஸ்காந்த என அடையாளம் காணப்பட்டள்ளார். இவரின் சடலம் களுவாஞ்சிகுடி அதார வைத்தியாசலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்விபத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த 5 பேரும்  களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு அதில் இருவர் மேலதிக சிகிசசைகளுக்காக மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், ஏனைய 3 பேர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியாலையிலிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
















SHARE

Author: verified_user

0 Comments: