மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிசன் வித்தியாலயத்தின் இல்லமெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்வுகள் இன்று(02) வெள்ளிக்கிழமை மாலை கொக்கட்டிச்சோலை குமரகுரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன.
வித்தியாலயத்தின் அதிபர் கோ.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் மற்றும் கல்வி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதன்போது, மாணவர்களின் அணிநடை மரியாதை, மாணவர்களுக்கிடையிலான அஞ்சல் மற்றும் குறுந்தூர ஓட்டப்போட்டிகள், சிறுவர்களுக்கான செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வுகள், பழைய மாணவர்கள், பெற்றோர்களுக்கான போட்டி நிகழ்வுகளும், உடற்பயிற்சி கண்காட்சியும் நடைபெற்றன.
போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களும், இல்லச்சோடணை, அணிநடைமரியாதை போன்றவற்றில் வெற்றிபெற்ற குழுக்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment