14 Mar 2018

கைப்பேசி களவில் ஈடுபட்ட பராமரிப்பு இல்லச் சிறுவர்கள் 4 பேரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில்

SHARE
ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் உள்ள சந்திவெளிப் பிரதேசத்தில் இரண்டு கடைகளை உடைத்து பணம், பொருட்கள் திருட்டில் ஈடுபட்டது சம்பந்தமாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான  4 சிறுவர்களையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்க மறியலில் தடுத்து வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி Additional Magistrate and Additional District Judge Muhammath Ismail Muhammath Rizvi முன்னிலையில் சந்தேக நபர்களான சிறுவர்கள் திங்கட்கிழமை 12.03.2018 ஆஜர் செய்யப்பட்டனர்.

இதன்போது நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
26ஆம் திகதி வரை மட்டக்களப்பிலிலுள்ள சிறுவர் பராமரிப்பு இல்லமொன்றில் பாதுகாப்பில் வைத்து இந்தச் சிறுவர்களைப் பராமரித்து அடுத்து தவணைக்கு சிறுவர்களை ஆஜர்படுத்துமாறும் இந்த உத்தரவில் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டது.

சந்திவெளியிலுள்ள சிறுவர் பராமரிப்பு இல்லமொன்றைச் சேர்ந்த இந்த சிறுவர்கள் நால்வரும்  கடந்த ஞாயிற்றுக்கிழமை 11.03.2018 சந்திவெளியிலுள்ள கைப்பேசி விற்பனை நிலையம் மற்றும் உணவு விடுதி ஆகியவற்றிலிருந்து திருடப்பட்ட 4800 ரூபாய் பணம், சுமார் 35 க்கு மேற்பட்ட கைப்பேசிகள், 2 டப்கள், கமெரா, அலைபேசி பற்றரி சார்ஜர்கள், அலைபேசி மீள் நிரப்பு அட்டைகள் என்பனவற்றுடன் ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட 4 சிறுவர்களும் 10 தொடக்கம் 14 வயதிற்கிடைப்பட்டவர்கள் ஆவர்.

இதேவேளை, தொடர்ந்து சிறுவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் திருடிய அலைபேசிகளில் மேலும் விலையுர்ந்த 10 நவீன அலைபேசிகளை பொலிஸார் திருட்டுப்போய் இரண்டாம் நாளான திங்கட்கிழமையும் வெவ்வேறு இடங்களிலிருந்து கைப்பற்றியிருந்தனர்.

SHARE

Author: verified_user

0 Comments: