சிறு பராயத்தில் இருந்தே மாணவர்களுக்கு ஆங்கில அறிவை தொடர்ச்சியாக புகட்ட வேண்டும் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
சமூக கல்வி அபிவிருத்தி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு பிரின்டர் மற்றும் ஸ்கனர் போன்றவற்றை திங்கட் கிழமை (26) வழங்கி வைத்துவிட்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்….
சமூக கல்வி அபிவிருத்தி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாடுகள் இத்தோடு நின்று விடாது மேலும் தொடர வேண்டும் என வாழ்துகின்றேன். தற்காலத்தில் ஆங்கில மொழி மிகவும் முக்கியமானதொன்று. பல்கலைக்கழகங்கள் செல்லும் மாணவர்கள் ஆங்கில மொழி ஆற்றலின்றி பெரிதும் அல்லறும் நிலை காணப்படுகின்றமையை அவதானிக்க முடிகின்றது.
சமூக கல்வி அபிவிருத்தி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பட்டிருப்பு தொகுதியில் உள்ள பல்கலைக்கழகம் அனுமதி பெறுகின்றவர்களுக்கு ஆங்கில பயிற்சி வகுப்புக்கள் வழங்கவுள்ளனர். அதற்கான அனைத்து உதவிகளையும் வழங்க எமது இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு தயாராக உள்ளது.
மேலும் இந்த அமைப்பால் முன்னெடுக்கப்படவுள்ள க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான பாடத் தெரிவு மற்றும் பல்கலைக்கழகத்திற்கான பாடநெறி தெரிவுகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்குகள் என்பனவற்றுக்கும் எமது இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு உதவி வழங்க தயாராக உள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் எமது சமூகத்திற்கு அவசியமானது எனவும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment