வாழுகின்ற போது பாராட்டுகின்ற தன்மையானது தற்போது எமது சமூகத்தில் அருகிக் கொண்டு செல்கிகின்றது. மாறாக இறந்தவுடன் நிலைவைக்கின்ற தன்மையைத்தான் நாங்கள் தற்போது காணமுடிகின்றது. என மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மா.உதயகுமார் தெரிவித்தார்.
போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட பிரதேச கலாசார விழா பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி தலைமையில் வெள்ளிக்கிழமை (29) நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலையே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடரந்து உரையாற்றுகையில்
தமிழயையும் தமிழர் தன்பண்பாட்டினையும் வளர்த்த வீரம் விளைந்த மண்ணில் இருந்து கலாசாரவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றுவதில் நான் பெருமையடைகின்றேன். போரதீவுபற்று என்பது நாங்கள் கலையை வளர்கக வேண்டிய இடமல்ல கலையை அறிந்து கொண்டு நாங்கள் பயிற்சி பெறவேண்டிய இடம். அவ்வாறான இடத்தில் இவ்வாறான கலையுடன் கூடிய பண்பாட்டு விழா நடைபெறுவதென்பது பாராட்டக்கூடிய விடயமாகும்.
இந்த மண்தான் கலைகாலசாரத்தினை சிறப்பாக கட்டுக்கோப்புடன் பாதுகாத்து, குடும்ப உறவுபோன்று வளர்த்தெடுக்கின்ற பிரதேசமாக இப்பிரதேசம் காணப்படுகின்றது. இத்தகையதோர் பிரதேசத்தில் இருந்து மருதம் என்ற நூல் வெளிவருவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
ஒரு பிரதேசத்திலே ஒரு இனத்தினுடைய, மொழியினுடை அல்லது ஒரு சமூகத்தினுடைய இருப்பு என்பது ஆவணப்படுத்தலூடாகவே செய்யப்படவேண்டிய விடயமாகும். இந்த விடயத்திற்கு, இங்கு வெளியிட்ட நூல் சிறந்த சான்றாகும் இந்த சேவையானது எமது சமூகத்தின் எதிர்கால சந்ததிக்கு விட்டுச் செல்லுகின்ற ஆவணப்பதிவாக அமைகின்றது. இவை இன்றைய நிகழ்வுகள் நாளைய வரலாறுகளாக இளம் சமூகத்தின் மத்தியில் இடம்பிடிக்க வழிசமைக்கும் என்பதில் ஐயமில்லை இதற்காக நான் உங்களை பாராட்டுகின்றேன்.
இன்று எமது மொழியிலே இருக்கின்ற பல்வேறு விதமான ஆளுமைகளை கலைகளின் ஊடாக வெளிக்கொணர்ந்து, அதனi எமது சமூகத்திற்கு கொண்டு செல்லுகின்றவர்கள் கலைஞர்களேயாகும். அவர்கள் வாழ்நாள் முழுவதும் பாராட்ட படவேண்டியவர்கள். வாழ்கின்ற போது பாராட்டுகின்ற தன்மையானது தற்போது எமது சமூகத்தில் அருகிக் கொண்டு செல்கிகின்றது. மாறாக இறந்தவுடன் நிலைவைக்கின்ற தன்மையைத்தான் நாங்கள் தற்போது காணமுடிகின்றது. வழும்போது பாராட்டுவதன் ஊடாகவே எமது இளஞ்சமூகம் எழுச்சியடையும். அடைவதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment