காத்தான்குடி நகரசபைப் பிரிவில் டெங்கு நுளம்புகள் பரவும் சூழலைத் தவிர்ப்பதற்காக பாழடைந்த மற்றும் பராமரிக்கப்படாத கட்டிடங்களைத் தகர்த்தெறியும் நடவடிக்கையைத் துவங்கியிருப்பதாக நகரசபைச் செயலாளர் எம்.ஆர்.எப். றிப்கா தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை 19.01.2018 இந்த பாழடைந்த கட்டிடக் காடுகளைத் துப்புரவு செய்யும் பணிகள் காத்தான்குடி நகரசபை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் காத்தான்குடி பொலிஸாரின் துணையுடன் ஆரம்பிக்கப்பட்டன.
காத்தான்குடி முதலாம் குறிச்சிப் பகுதியில் ஆரம்பிக்க்கப்பட்ட இந்த நடவடிக்கையில் முதற்கட்டமாக நீண்ட காலமாக பராமரிக்கப்படாது பாழடைந்த நிலையிலுள்ள கட்டிடங்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.
இதற்கு முன்னர் இந்த வகையான பாழடைந்த இடங்களைப் பராமரிக்குமாறு அதன் உரிமையாளர்களுக்கு பல முறை அறிவுறுத்தப்பட்டதாகவும் தமது அறிவுறுத்தல்கள் உதாசீனம் செய்யப்பட்ட நிலையில் கடைசியாக சிவப்பு எச்சரிக்கை அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அதன் பின்னரே அதிகாரிகள் இந்த நடவடிக்கையைத் துவங்கியிருப்பதாகவும் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment