ஏவலாளிகள் கிழக்கில் ஆட்சியாளர்களாக இருக்க வேண்டும் என்று நினைத்ததன் விழைவதாக மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கதின் உயிர் பறிக்கப்பட்டது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 12வது நினைவேந்தல் திங்கட்கிழமை (25) மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இங்கு உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் - கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியத்தை உடைதெறிந்துவிட்டு அந்த இடத்தில் தங்களது ஏவலாளிகளை எங்களுக்கு எஜமானர்களாக மாற்றி அந்த எஜமாளர்கள் எங்களை அவர்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவேண்டும் அவர்கள் நினைத்ததைந் செய்ய வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட கொலையாகவே மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலையை நான் கருதுகிறேன். இந்த படுகொலையின் சூத்திரதாரிகள் யார் என்பதை மக்கள் அறிந்துள்ளார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பிழவுபட்ட பின்னர் யாரை ஆதரிக்க வேண்டும் என கொள்கையோடு தீவிரமாகப் பரிசீலித்து முடிவெடுத்து அதன் வழியாக செயற்பட்டதன் காரணமாக அவரது உயிர் பறிக்கப்பட்டது.
மலையகத்தில் பொதுத் தேர்தலில் அரசியல் நாடகம் நடாத்தி வெற்றிகரமான தோல்வியைச் சந்தித்தவர்கள் கிழக்கிலும் ஒரு நாடகத்தை அரங்கேற்ற உள்ளார்கள். மக்கள் தீர்ப்பின்போது அவரது எண்ணத்திற்கு என்ன கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஊடக தர்மத்தில் இருட்டிப்புக்கள் இருக்க கூடாது.
மட்டக்களப்பில் ஊழல் மோசடிகளுக்கு எதிராக களமிங்கியுள்ளார் ஆனால் கடந்த காலத்தில் மட்டக்களப்பில் ஊழல் மோசடி செய்தவர்களைப் பாராட்டி எழுதியவர்கள் இன்று ஊழல் மோசடியைப் பற்றிச் சொல்வதற்கு எந்தவித யோக்கியதையும் கிடையாது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவுக்கு நிகராக அரசியல் பேச்சுவார்தையினை நடத்தக்கூடிய தலைவர் எவரும் இல்லை என்பதை வடகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜபெருமாள் தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கூறியுள்ளார்.
நிகழ்காலத்தில் கிடைக்க கூடிய சந்தர்ப்பங்களைத் தூக்கி எறிந்துவிட்டு வாய்ச்சவால்களை விட்டுக்கொண்டிருக்போமானால் 30 வருட யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய தீர்வினைப் பெற்றுக்கொடுப்பது யார்? எமது மக்கள் பொருளாதார, சமூக, அரசியல், கல்வி ரீதியாக பாரிய இடைவெளியில் இருந்துகொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இன்னும் இந்த மக்களைப் பலிக்கடாக்களாக்கி ஒரு கற்பனையான இலக்கைக் காட்டிக் கொண்டு நாங்கள் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது.
அபிவிருத்தி எமக்கு வேண்டாம் உரிமைதான் எமக்கு வேண்டும் என கேட்ட எமது மக்கள் தீர்வும், அபிவிருத்தியும் வேண்டும் என இரு பக்கங்களிலும் சிந்திக்கின்றார்கள். உரிமையைப் பெற்றுவிட்டு அபிவிருத்திக்குச் செல்ல வேண்டும் என கூறும் வார்த்தைகள் மக்களிடையே ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது” என்றார்.
0 Comments:
Post a Comment