6 Nov 2017

வெலிக்கந்தையில் வீதி விபத்துலொறிச் சாரதி ஸ்தலத்தில் மரணம்

SHARE
கொழும்பு - மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் வெலிக்கந்தை பொலிஸ் பிரிவிலுள்ள மொனராத்தென்ன பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 05.11.2017 வேளையில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் மூவர் பேர் இச்சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளனர்.
அம்பாறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கல்முனை சாலைக்குச் சொந்தமான இ.போ.ச பஸ்ஸ{டன் பொலொன்னறுவையிலிருந்து வெலிக்கந்தை நோக்கி வந்து கொண்டிருந்த லொறியொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து பஸ்ஸ{டன் மோதியதில் இவ்விபத்து நேர்ந்ததில் லொறிச் சாரதியே ஸ்தலத்தில் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வெலிக்கந்தை பிரதேச வைத்தியசாலைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டு படுகாயமடைந்த மூவர் மேலதிக சிகிச்சைக்காக பொலொன்னறுவை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

ஸ்தலத்திற்கு விரைந்த வெலிக்கந்தைப் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கிய பஸ்ஸில் இருந்த  பயணிகள் தமது பயணத்தை தங்கு தடையின்றித் தொடர்வதற்காக வேறு பஸ் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டதாகவும் பயணிகள் எவருக்கும் காயமேற்படவில்லை என்றும் கல்முனை இலங்கைப் போக்குவரத்துச் சபை சாலை முகாமையாளர் வெள்ளத்தம்பி ஜவ்பர் தெரிவித்தார்.




SHARE

Author: verified_user

0 Comments: