மட்டக்களப்பு - வவுணதீவு பிரதேச செயலக, விளாவட்டவான் கிராமத்தில் போதைப் பொருட் பாவனை விழிப்ணர்வு வேலைத்திட்டம் புதன்கிழமை காலை 04.10.2017 முன்னெடுக்கப்பட்டது.
சமுர்த்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்வில் போதைப்பொருள் பாவனையால் மக்களுக்கும் சமூகத்திற்கும் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்களால் தெளிவூட்டப்பட்டது.
கிராமத்தில் சட்டவிரோதமாக எவரும் மது விற்பனை செய்யக் கூடாது என ஏற்கெனவே செய்த தீர்மானத்தை எதிர்காலத்திலும் தொடர்ந்து கடைப்பிடிப்பதுடன் இனிவரும் காலங்களில் போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிக்கும் செயற்பாட்டிற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக மக்கள் முடிவு செய்தனர்.
இந்நிகழ்வில் சமூர்த்தி தலைமை முகாமையாளர், சமூர்த்தி உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
0 Comments:
Post a Comment