மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில், கல்வி பயிலும் மாணவன் ஒருவன், சமூக விஞ்ஞான போட்டியில் முதலிடத்தினை பெற்றுள்ளார்.
ப.ரிசாந்தன் என்ற மாணவனே சமூகவிஞ்ஞான போட்டியில், கிழக்கு மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த முப்பது வருட யுத்தத்தில் வெகுவாக பாதிக்கப்பட்ட பிரதேசத்தில், இப்பாடசாலை அமைந்துள்ளது. கல்வியில் தற்போதுதான் வளர்ச்சியடைந்து வருகின்ற நிலையிலும், கடந்த காலங்களில் விளையாட்டுப் போட்டிகளில் தேசிய மட்டத்திலும் இப்பாடசாலை மாணவர்கள் திறமையினை வெளிக்காட்டியிருந்தமையும் எடுத்துக்காட்டத்தக்கது.
0 Comments:
Post a Comment