மட்டக்களப்பு நகரத்தில் நிருமாணிக்கப்பட்டு அபிருத்திப்பணிகள் மிக நீண்டகாலமாக இடைநிறுத்தப்பட்ட இந்நிலையில் காணப்படும் பொது நூலகக் கட்டடத்தின் அபிவிருத்திப்பணிகளை முன்னெடுக்க யாரும் முனவராத நிலையில் மாகாணசபைகள் மற்றும், உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிநிநேசன் விடுத்த வேண்டுகோளிற்கு இணைந்த மேற்படி பொது நூலகத்தின் கீழ் தளத்திற்குரிய கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய நிதி ஒருக்கீடு செய்ய இணைங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் புதன் கிழமை (20) தெரிவித்தார்.
மட்டக்களப்பு நகரத்தில் பாட்டாளிபுரம் மைதானத்திற்கு அருகில் புதிய பாது நூலகக் கட்டடம் ஒன்று நிருமாணிக்கப்பட்டு வந்த நிலையில் அபிவிருதிப்பணிகள் மிக நீண்டகாலமாக இடைநிறுத்தப்பட்டுக் காணப்படுகின்றது. இவ்விடையம் தொடர்பில் மேற்படி நாடாளுமன்ற உறுப்பினரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் தெரிவிக்கையில்….
இந்நூலக கட்டடத்திற்குரிய மதிப்பீட்டு அறிக்கையை விரைவில் அனுப்பி வைக்குமாறும், அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மட்டு நகரில் அமைக்கப்பட்டு பூர்தி செய்யாமல் கவனிப்பாரற்றுக் கிடக்கும் பொது நூலகக்கட்டடத்தை முழுமையாகக் கட்டி முடிக்க நான் முழு முயற்சியினையும் எடுத்து வருகின்றேன். பேச்சுக்களோடு மட்டமல்லாது எமது பிரதேசத்தினை சகலவழிகளிலும் முன்னேற்ற வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். இப்பொது தூலகக் கட்டடம் முற்றுமுழுதாக கட்டிமுடிப்பதற்கு 165 மில்லியன் தேவை தற்போதைக்கு இதன் கீழ் தளம் கட்டி முடிப்பதற்கு 65 மில்லியன் ரூபா நிதி தேவையாகவுள்ளது.
மேலும் உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சின் மூலம், மட்டக்களப்பில் வீதியபிவிருத்திக்காக 90 மில்லியனும், நெடுஞ்சாலைகள் அமைசின் மூலம் வீதியபிவிருத்திகளை மேற்கொள்ள 4 கோடி ரூபாவும், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment