(RTX)
மட்டக்களப்பு மேற்கு வலயத்திற்குட்பட்ட எல்லைப்பு பாடசாலையான நாற்பதுவட்டை விபுலானந்தா வித்தியாலயத்தில் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் இலவச பிரத்தியேக வகுப்புக்கள் தற்போது நடாத்தப்பட்டுவருகின்றன.
அவ்வமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் வகுப்புக்களை ஞாயிற்றுக் கிழமை (02) பார்வையிட்டதுடன் வளவாளர்களுக்கான ஊக்குவிப்பு பணத்தினையும் வழங்கிவைத்தார். இதன்போது கருத்து தெரிவித்த தவிசாளர்,மட்டக்களப்பு மேற்கு வலயத்திற்குட்பட்ட எல்லைப்பு பாடசாலையான நாற்பதுவட்டை விபுலானந்தா வித்தியாலயத்தில் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் இலவச பிரத்தியேக வகுப்புக்கள் தற்போது நடாத்தப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பின் எல்லைப்புறக் கிராமமற்றும் அதிகஸ்ட பிரதேச பாடசாலைகளில் இவ்வாறான முக்கியபாடங்களுக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் இருப்பதால் இவ்வாறான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவும், தொழில்வாய்ப்புக்களைபெற முனைகின்றபோது போதியளவானபெறுபேறு இன்மையினால் தொழில்வாய்ப்புக்களை பெறமுடியாதுள்ளன.
இவ்வாறான பிரச்சினைகளுக்கு பலர் முகங்கொடுத்து வருகின்றனர். இந்தபாடசாலையில் க.பொ.தசாதாரணதரம் ஆரம்பித்த காலத்தில் இருந்து கணிதபாடத்திற்கான ஆசிரியர் நியமிக்காமை வேதனைதரும் விடயம்தான்.
அரசாங்கம் பாடசாலைக்கு கணிதபாட ஆசிரியர் ஒருவரை நியமிக்கும் வரை எமது அமைப்பினால் முன்நெடுக்கப்பட்டுவரும். இப்பாடசாலையில் பகுதிநேரமாக ஆங்கிலம், தமிழ், கணிதம் ஆகியபாடங்கள் நடைபெறுகின்றன என அவர் தெரிவித்தார். இதுபோன்றசேவைகளை இவ்வமைப்பு பல பாடசாலைகளில் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment