மட்டக்களப்பிலிருந்து இயங்கிவரும் அஹிம்சா எனும் தன்னார்வ தொண்டர் அமைப்பின் தாகம் தீர்ப்போம் எனும் குடிநீரை ஏற்படுத்திக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் ஏறாவூர்ப்பற்று பிதேச செயலகப் பிரிவில் உள்ள இராஜபுரம் கிராமத்தில் குடிநீர்த்தாங்கி ஒன்று அமைக்கப்பட்டு ஞாயிற்றுக் கிழமை (16) வைபவ ரீதியாக திறந்து மக்களிடம் கையளிக்கப்பட்டது.
ஏறாவூர்ப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் திருமதி ஆர்.முகுந்தன், பிரதேச சபைச் செயலாளர் கே.பேரின்பராஜா, அஹிம்சா நிறுவனத்தின் தலைவர் வி.விஜயராஜா ஆகியோர் இணைந்து இக் குடிநீர்த்தாங்கியை திரை நீக்கம் செய்து திறந்து வைத்தனர்.
இந்நீர்த்தாங்கி மூலம் இக்கிராமத்து மக்கள் மட்டுமல்லாது, கித்துள், மரப்பாலம் முதலான கிராம மக்களும் நன்மை பெறுவர். இராஜபுரம் மகாவிஷ்னு ஆலயத்துக்குச் சொந்தமான காணியினுள் அமைக்கப்பட்டுள்ள இக்குடி நீர்த்தாங்கி ஆலய நிர்வாகத்தினதும் இராஜபுரம் கிராம அபிவிருத்திச் சங்கத்தினதும் பொறுப்பில் இருக்கும் அதே நேரம் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை மேற்பார்வை செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளது.
இந்நிகழ்வுக்கு இராஜபுரம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் எஸ். ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராஜபுரம் மகா விஷ்னு ஆலயத்தின் பூசகர் எஸ். வீரையா, உதவிப் பிரதேச செயலாளா திருமதி. ஆர்.முகுந்தன், பிதேச சபைச் செயலாளர்; கே.பேரின்பராஜா, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ். கருணாகரன், அபிவிருத்தி உத்தியோகத்தர், அஹிம்சா நிறுவனத்தின் தலைவர் வி.விஜயராஜா, உபதலைவர் எஸ்.ராஜமோகன், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைத் தலைவரும் அஹிம்சா நிறுவன ஆலோசகருமான த.வசந்தராஜா, அஹிம்சா நிறுவனத்துக்கான நோர்வே நாட்டு இணைப்பாளர் சு.பரணீதரன், கரடியனாறு பொலிஸ் அதிகாரி எஸ.குணம் முதலானோரும் பெருமளவு கிராம மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.










0 Comments:
Post a Comment