மட்டக்களப்பில் இரு விழி பார்வைக் குறைபாடு உள்ள 60 பேருக்கு கண்கள் பரிசோதிக்கப்பட்டு கண் கண்ணாடிகள் இலவசமாக விநியோகிக்கப்பட்டதாக கிழக்கு மாகாண விஸ்வகர்மா சம்மேளனத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான
சிவம் பாக்கியநாதன் தெரிவித்தார்.
கொழும்பு பட்டக்கண்ணு பவுண்டேஷன் அனுசரணையில் மட்டக்களப்பு நகரம் கோட்டமுனை மகா மாரியம்மன் ஆலய விஸ்வகர்ம மண்டபத்தில் ஞாயிறன்று 26.02.2017 இந்நிகழ்வு இடம்பெற்றது.
கல்லடி இராமகிருஷ்ணமிசன் தலைவர் சுவாமி பிரபு பிரேமானந்தா, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராசசிங்கம், கோட்டைமுனை மகா மாரியம்மன் ஆலயத் தலைவர் எஸ். சிவலிங்கம் உட்பட பயனாளிகளும் ஊர்ப்பிரமுகர்களும் இந்நிகழ்வி;ல் கலந்து கொண்டனர்.
முன்னதாக இம்மாதம் முதல் வாரத்தில் மட்டக்களப்பில் பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இலவச கண் பரிசோதனை முகாமில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த 280 பேருக்கு கண் கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கொழும்பு பட்டக்கண்ணு பவுண்டேஷன் அனுசரணையில் கிழக்கு மாகாண விஸ்வகர்மா சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.
0 Comments:
Post a Comment