13 Feb 2017

"நோயற்ற வாழ்வு" எனும் உடற்பயிற்சி

SHARE
(க.விஜி)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணத்தில் உதித்த  "நோயற்ற வாழ்வு" எனும் உடற்பயிற்சி மற்றும் தேகராக்கிய மேம்பாட்டு வாரத்தினை முன்னிட்டு  மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியினர் இன்று (9.2.2017) வியாழக்கிழமை காலை ஏழுமணி முதல்  உடற்பயிற்சியை மேற்கொண்டார்கள்.மெதடிஸ்த மத்திய கல்லூரியின் சுற்றாடல் கழகத்தின் ஏற்பாட்டில் கல்லூரியின் முதல்வர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.பிரதியதிபர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள் பங்குபற்றினார்கள்.பாடசாலையில் இருந்து புறப்பட்டு நீதிமன்றத்தின் வழியூடாகச் சென்று மாவட்டச்செயலகம்
வரை சென்று ஆற்றங்கரை வீதியாக மீண்டும் சென்று அப்பாச்சி விளையாட்டு மைதானத்தினை கடந்து பாடசாலையை சென்றடைந்து.

இந்த வேகநடைப்பயிற்ச்சியில் சுமார் 800 பேர் கலந்து கொண்டார்கள்.அதிபர் விமல்ராஜ் குறிப்பிடுகையில் :- இவ்வாறான உடற்பயிற்சியினை எமது பாடசாலை,பிரதியதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஒருமித்து பயிற்ச்சியில் ஈடுபடுவது எனக்கு மகிழ்ச்சியை தருகின்றது.அதாவது சுற்றாடலில் அசுத்தமான காற்றை சுவாசிப்பததும்,நஞ்சுள்ள உணவுகளைப் சாப்பிடுவதும்,தவறான உணவுப்பழக்கங்களினாலும் மனிதனின் ஆயுள் குறைவடைகின்றது.இதனை தெரிந்து  செய்வதனால் மனிதன் சோம்பறிகளாகவும்,நோயாளிகளாகவும்,சமூகத்தில் மிளிர்கின்றார்கள்

இவ்வாறான உடற்பயிற்சியை மேற்கொள்ளுவதனால் மனிதன் சுகதேகியாக நீண்டநாட்கள் வாழலாம்.நோயற்ற சமூகத்தை கட்டியெழுப்புவதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணத்தை திண்ணமாக்கிக் கொள்ளவேண்டும்.அப்போது நாட்டிலே ஆரோக்கியமான மக்களை, சமூகத்தை கட்டியெழுப்பமுடியும் எனத்தெரிவித்தார்.








SHARE

Author: verified_user

0 Comments: