26 Feb 2017

மட்டக்களப்பு முன்னாள் மேயரின் கணவர் கைது

SHARE
மட்டக்களப்பு முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரனின் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை (26.02.2017) மாலை இடம்பெற்ற கோடரி வெட்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னாள் மேயரின் கணவர் கனகசபை பிரபாகரன் (வயது 47) கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப்
பொலிஸாபர் தெரிவித்தனர்.

நபரொருவர் மேற்படி மட்டக்களப்பு முன்னாள் மேயரின் வீட்டில் வெட்டப்பட்டுக் கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் அங்கு சென்று காயம்பட்ட நபரை மீட்டு  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்ததோடு முன்னாள் மேயரின் கணவரையும் சந்தேகத்தின் பேரில் தேடிவந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பத்தைத் தொடர்ந்து சிவகீதாவின் வீட்டில் பொலிஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: