(துறையூர் தாஸன்)
கல்லாறு விளையாட்டுக் கழகத்தினரால் இன்றுகாலைமாபெரும் மரதன் ஒட்டப்போட்டிதைத்திருநாளை முன்னிட்டு நடாத்தப்பட்டது. ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்தில் இருந்து பத்துகிலோமீற்றர்
தூரத்தை பிரதான வீதிவழியாக கடந்த வெற்றியாளர்கள் கழகத்தினரால் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் அத்தியட்சகர், களுவாஞ்சிக்குடி பொலிஸ் போக்குவரத்து முதன்மை அதிகாரி, ஊர்ப் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், ஆலய தலைவர்கள், விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் உறுப்பினர்,மற்றும் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள் போன்றோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.
இம் மரதன் ஓட்டப்போட்டியில் முதலாம் இடத்தைஆனந்தன் சதோசும் இரண்டாம் இடத்தைராஜேந்திரம் தனுசும் மூன்றாம் இடத்தைஉதயகுமார் தனுஜனும் தட்டிக்கொண்டனர்.இவர்களுக்கானபரிசுப் பொருட்கள் பிரதானஅதிதிகளாலும் ஏனைய ஆறுதல் பரிசுகள் விளையாட்டுக் கழகநிர்வாகத்தினாலும்வழங்கிவைக்கப்பட்டன.
கல்லாறுவிளையாட்டுக் கழகமானதுகடந்த 27 வருடகாலமாகமாபெரும் மரதன் ஒட்டப்போட்டியைதைத்திருநாளான்றுநடாத்திவருகின்றதென்பதும்குறிப்பிடத்தக்கதாகும்.














0 Comments:
Post a Comment