2 Dec 2016

மண்முனை தென் எருவில் பற்றில் இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல்.

SHARE
எதிர்வரும் 18 ஆம் திகதி நாடு பூராகவும் நடைபெறவுள்ள 2017 ஆம் ஆண்டுக்கான இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வெள்ளிக் கிழமை (02) நாடு பூராகவும் நடைபெற்றது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்ற வேட்பு மனுத்தாக்கலில் 4 பேர் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி. எம்.கோபாலரெத்தினம், இளைஞர் சேவை அதிகாரி திருமதி.கி.சதீஸ்வரி, பிரதேச இளைஞர் சம்மேளனத் தலைவர் இ.வேணுராஜ், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகஸ்தர் ஏ.சி.எம்.ஐயூப், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

எதிர்வரும் 18 ஆம் திகதி களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திலும், மட்.மாங்காடு சரஸ்வதி வித்தியாலயத்திலுமாக இரண்டு இடங்களில் வாக்களிப்புக்கள் நடைபெறவுள்ளன.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் 45 பதிவு செய்யப்பட்ட கழகங்களைச் சேர்ந்த 1872 இளைஞர் யுவதிகள் இம்முறை வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். வெள்ளிக் கிழமை (02) முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி நள்ளிரவு வரை வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடலாம் என மண்முனை தென் எருவில் பற்று இளைஞர் சம்மேளனத் தலைவர் இ.வேணுராஜ் இதன்போது தெரிவித்தார்.

மண்முனை தென் எருவில் பற்று , போரதீவுப்பற்று, மண்முனை தென்மேற்கு ஆகிய பிரதேச செயலாளர் பகுதிகளை உள்ளடக்கிய பட்டிருப்பு தேர்தல் தொகுதியிலிருந்து ஒருவர் மாத்திரமே இத்தேர்தல் மூலம் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.















SHARE

Author: verified_user

0 Comments: