வெள்ளிக்கிழமை (02.12.2016) மட்டக்களப்பு கல்லடி பால வாவியில் இருந்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியைச் சேர்ந்த ரீ. சிவதாஸ் (வயது 41) என்ற பொலிஸ் அதிகாரியே இவ்வாறு பலியாகியுள்ளார். வெள்ளிக்கிழமை பகல் கல்லடிப் பகுதி பாலத்திற்குக் கீழே வாவியிலிருந்து இவரது சடலத்தை மீனவ சுழியோடிகளும் பொது மக்களுமாகச் சேர்ந்து மீட்டுள்ளனர்.
இவர் வியாழக்கிழமை இரவு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நோய்வாய்ப்பட்டதாகக் கூறி அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே வைத்தியசாலை நிருவாகத்திற்குத் தெரியாமல் கல்லடிப் பாலத்திற்கு வந்து அங்கிருந்து வாவியில் குதித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
கடந்த ஒரு சில நாட்களாக குடும்பத் தகராறில் இவர் உழன்று வந்ததாகவும் தெரியவந்திருக்கின்றது. பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment