2 Dec 2016

கல்விக் கூட்டுறவுச் சங்கத்தின் கிழக்கு மாகாண கிளைப் பணிமனை மட்டக்களப்பில் திறப்பு

SHARE
கல்விக் கூட்டுறவுச் சங்கத்தின் கிழக்கு மாகாணத்துக்கான கிளைப் பணிமனை மட்டக்களப்பு நகரில் சனிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
இல: 26 ஏ, கோவிந்தன் வீதி, மட்டக்களப்பு எனும் முகவரியில் இந்த கிளை அலுவலகம் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்திலுள்ள கல்விக் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுச் சபை மற்றும் அங்கத்தவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம் இந்த மாகாணத்துக்கான கிளைப் பணிமனை இனி கருமங்களை மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாகாணத்துக்கான அலுவலகத்தின் கிளை  மட்டக்களப்பில் இயங்குவதன் மூலம் அதன் அங்கத்தவர்கள் இனிமேல் இலங்கைத் தலைநகர் கொழும்பு சென்று வீண் அலைச்சல் படவேண்டியதில்லை என்று அதன் கிழக்கு மாகாண அங்கத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

SHARE

Author: verified_user

0 Comments: