மட்.களுதாவளை சங்கமம் எனும் பழைய மாணவர்கள் அமைப்பு கதாவளைக் கிராமத்திலுள்ள பாடசாலைகளிலிருந்து ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 17 மாணவர்களுக்கு
தலா ஒவ்வாரு பறுமதியான ஆங்கில அகராதிகளை வெள்ளிக்கிழமை (02) வழங்கி கௌரவித்துள்ளது.
இதன்போது பழைய மாணவர் அமைப்பினர் மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், உள்ளிட்டோர் இதன்போது கலந்து கொண்டு அகராதிகளை மாணவர்களுக்கு, வழங்கி வைத்தனர்.
எமது எதிர்கால சந்ததியினரின் அடிப்படை ஆங்கில அறிவைப் பெருக்குவதற்கு தமது சங்கமம் எனும் பழயை மாணவர் அமைப்பு களுதாவளைக் கிராமதிலுள்ள மாணவர்களுக்கு தொடர்ந்து உதவிவருவதாக மேற்படி பழைய மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.சர்ஜின் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment