மட்டக்களப்பு மாவட்டம் மண்முனைப் பற்று பிரதேச செயலக கலாசார பேரவை நடாத்திய, கலைகலாசார விழா, வியாழக்கிழமை (01) ஆரையம்பதி நந்தகோபன் கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளரும், கலாசார பேரவைத் தலைவருமான திருமதி.சத்தியானந்தி நமசிவாயம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன் முதன்மை அதிதியாகவும் கிழக்குப் பல்கலைக் கழக முன்னாள் நுண்கலைத்துறை பேராசிரியர் சி.மௌனகுரு மற்றும் பாரம்பரியக் கலைஞர் கலாபுஸணம் எம்.கணபதிப்பிள்ளை போன்றோர் சிறப்பு அதிதிகளாகவும், மண்முனைப்பற்று கோட்டக்கல்வி அலுவலர் அல்ஹாஜ்.எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன் மற்றும் மண்முனைப்பற்று தபால் அலுவலக தபால் அதிபர் திருமதி.வை.லோகேஸ்வரன் போன்றோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்துசிறப்பித்தனர்.
கலாசாரபண்பாட்டுப் பவனியுடன் அதிதிகள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து நந்தகோபன் அரங்கில் கிராமியபாடல், கரகம், வாழ்வியல் பாடலான தலாட்டு, நாடகம், நடனம், மற்றும் முஸ்லிம்களின் பாரம்பரியக் கலையான களிகம்பு (பொல்லடி) போன்ற அளிக்கை வடிவங்கள், பிரதேசசெயலக அலுவலர்களினாலும் பாடசாலை மாணவர்களாலும் கலைமன்றங்களினாலும் அளிக்கை செய்யப்பட்டன.
மண்முனைப் பற்று பிரதேச செயலக கலாசார பேரவையினால் சிகரம் எனும் நூல் வெளியீடும் மற்றும் மண்முனைப்பற்று பிரதேச செயலக கலாசார பேரவைக்கான கீதமும் , சின்னமும் வெளியீட்டுவைக்கப்பட்டன. சிகரம் நூலுக்கான நயவுரையினை கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை தலைவிதிருமதி ரூபி வலன்ரீனா நிகழ்த்தினார்.
மண்முனைப்பற்று பிரதேசத்தில் கலையை வளர்ப்பதற்கும் பாதுகாப்பதற்கும் பணியாற்றிக் கொண்டிருக்கும் கலைஞர்கள், இதன்போது கௌரவிக்கப்பட்டனர். அந்த வகையில் இவ் வருடத்துக்கா னகலைஞர்களுள் சீ.ஆறுமுகம், சு.பரசுராமன், ஜனாப்.அ.லெ.மு.இப்றாஹீம் போன்ற முது பெரும் கலைஞர்களும் த.இன்பராசா, ஜீ.எழில்வண்ணன் போன்ற இளம் கலைஞர்களும், பேராசிரியர் சி.மௌனகுரு, திருமதி.ரூபி வலன்ரீனா மற்றும் பிரதே சசெயலாளர் போன்றோரினால் பாராட்டிகௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment