இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் அப்பியாசபுத்தகங்கள் வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் இலவசமாக மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் செயற்பாடு இராசமாணிக்கம் அவர்கள் பிறந்த ஊரான மண்டூரில் வெள்ளிக்கிழமை (02) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் பணிப்பாளர் இரா.சாக்கியன் தெரிவித்துள்ளார்.
தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவரும், பட்டிருப்புத் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இராசமாணிக்கம் அவர்களின் நினைவாக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு உருவாக்கப்பட்டு அவர் விட்டுச் சென்ற சமூகப் பணிகளை தொட்டுச்செல்வதற்காக பட்டிருப்பு தொகுதியினை மையப்படுத்தி பல்வேறுபட்ட சேவைகளை மக்களின் தேவையறிந்து அவ்வமைப்பின் பணிப்பாளர் இராசமாணிக்கம் சாணக்கியனின் தலைமையில் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
பட்டிருப்புக் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் தெரிவு செய்யப்பட்ட 16000 மாணவர்களுக்கு 3.5 மில்லியன் ரூபா செலவில் இலவசமாக அப்பியாசக் கொப்பிகளை வழங்குவதாக இதன்போது இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment