29 Nov 2016

மட்டக்களப்பு சிவில் பிரஜைகள் சபையின் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடல்…

SHARE
மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபையின் மூலம் மட்டக்களப்பு மாவட்ட

பட்டிப்பளை, ஓட்டமாவடி, செங்கலடி ஆகிய பிரசேங்களில் உள்ள சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நிகழ்வு எதிர்வரும் மார்கழி மாதம் இரண்டாம், மூன்றாம் வாரங்களில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் போது தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற நிலைமாறு கால நீதி நடவடிக்கைகளையும், உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான நடவடிக்கைகளையும் பற்றி தெளிவுபடுத்திக் கொள்வதற்காக மேற்படி பிரதேச மட்ட சிவில் சமுகத் தலைவர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் அவர்கள் தங்களின் கருத்துக்களை வழங்க முடியும்.

இச்சந்திப்பில் ஆர்வமும் விருப்பமும் கொண்ட மேற்படி பிரதேசங்களைச் சேர்ந்த
அரசியல் சாராத சிவில் சமுகங்களின் தலைவர்கள் 077 7679596 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலமோ அல்லது குறுந்தகவல் செய்வதன் மூலமோ தங்களது விருப்பத்தினைத் தெரிவித்துக் கொள்ளலாம். ஒரு அமைப்பில் இருந்து ஒருவர் மட்டுமேஏற்றுக் கொள்ளப்படுவர். ஒரு பிரதேசத்தில் 40 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர்.

மூவினத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளலாம். கலந்துரையாடல்கள் தமிழ்
மொழியிலேயே இடம்பெறும் என நிகழ்வு ஏற்பாட்டாளரும் மட்டக்களப்பு மாவட்ட
சிவில் பிரஜைகள் சபைத் தலைவர் வி. கமலதாஸ் தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: