இருபத்தாறு வருடங்கள் பாவனையற்றுப்போய் இருந்த திக்கோடை துப்பாலை கற்குவாறி வீதியினை பாவனைக்காக
புனரமைக்கும் பணி செவ்வாய்க்
கிழமை (25) கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம் அவர்களினால் முன்னெடுக்கப்பட்டது.
கருங்கல் உடைக்கும் தொழிலாளர்களின் கற்குவாறிகளை மையப்படுத்தியதாக அமைக்கப்பட்டிருந்த இவ் வீதியானது 1990 ஆம் ஆண்டு ஏற்பட்ட வன்செயலினை அடுத்து மக்களின் பாவனையற்று கைவிடபட்ட நிலையில் பற்றைகாடுகள், வளர்ந்து காணப்பட்டது.
தற்போது கற்களை ஏற்றுவதற்கு கற்குவாறிகளை நோக்கி வருகின்ற கனரக வாகனங்களின் தொகை அதிகரித்ததினால். கொங்கிறிற் இடப்பட்ட பல உள் வீதிகள் சேதமாகிய வண்ணம் உள்ளதாகவும், கைவிடப்பட்ட குறித்த விதியினை திருத்தி அமைப்பதன் ஊடாக பல உள் வீதிகளை காப்பாற்ற முடியும் என பிரதேச மக்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்ததனையடுத்து புனரமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது




0 Comments:
Post a Comment