எதிர்வரும் காலங்களில் நான் தேர்தலில் எந்த கட்சியில் போட்டியிடுவது என்பதனை மக்கள் தீர்மானிப்பர் எனது நோக்கம் மக்களுக்கு சேவை செய்தலே என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளரும் பிரதேச அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு திறிரூ ஹோட்டலில் இடம் பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் நீங்கள் எதிர்வருங்காலங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இணைந்து தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிகின்றோம் இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன என கேட்க்கப்பட்ட வினாவுக்கு பதிலளிக்கையிலையே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்.
நான் அரசியல் பேசுவதற்காக இவ் ஊடகவியலாளர் மகா நாட்டை நடத்தவில்லை முற்று முழுதாக எமது இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் எதிர்கால திட்டங்கள்இ நடந்துமுடிந்த வேலைத்திட்டங்கள் தொடர்பாக விளக்குவதற்கே இவ் ஊடகவியலாளர் மகாநாட்டை ஒழுங்கு செய்திருந்தேன். இருந்தாலும் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கவும் இருக்கமுடியாது
நாங்கள் பரம்பரை ரீதியாக தமிழரசுக் கட்சியை சார்ந்தவர்கள் எனது பாட்டனார் இரசாமாணிக்கம் ஐயா அவர்களின் நிகழ்வு ஒன்று களுவாஞ்சிக்குடியில் நடைபெற்றபோதுஇ அதற்கு நாங்கள் வருகைதந்திருந்தோம். அதுவரை எங்களுக்கு அரசியல் சார்பான எண்ணம் இருக்கவில்லை இங்கு வந்தபோது எமது பாட்டனார் வாழ்ந்த இந்த பிரதேசத்தின் நிலமையை அறிந்த போது இங்குள்ள மக்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவே பாட்டனாரின் சார்பாக அரசியலில் இறங்கும் எண்ணம் வந்தது
இது சம்பந்தமாக கதைத்தபோது மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதி ஒருவர் தொலைபேசியூடாக எங்களது அப்பாவிடம்இ அரசியலில் குதிக்கும் எண்ணம் இருந்தால் கைவிடுங்கள் எனத் தெரிவித்தார். இதன் பின்னர் 2015 பாட்டனார் சார்பாக ரிக்கேற்கேட்டோம் மறுத்துவிட்டனர்.
எந்தவொரு அரசியல் ஊடாகவும் நாங்கள் நினைத்தபடி மக்களுக்கு சேவை செய்ய முடியாத நிலை இங்கு இருக்கின்றது எனவேதான் எங்கள் பாட்டனார் விட்ட பணியினை தொடர்வதற்கு எவரிடமும் கையேந்த முடியாது என்பதற்காக நாங்கள் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு என்ற நிறுவனத்தை ஆரம்பித்து எமது மக்களின் வாழ்வாதாரம்இகல்விஇவிளையாட்டு என்பனவற்றினை முன்னேற்றுவதற்காக பலதரப்பட்ட திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
இதில் எந்தவித அரசியல் நோக்கமும் இல்லை. எமது நோக்கம் மக்களுக்கு சேவை செய்தல் மாத்திரமே அரசியல் ரீதியில் மக்களின் தேவைகளை மக்களுக்கு நேரடியாக சென்றடைய வைக்கமுடியாது. தற்போது இவ் அமைப்பினால் முன்னெடுக்கப்படும் சேவையூடாக நாங்கள் திருப்தி அடைகின்றோம். அதன் அடிப்படையில் எங்களது அமைப்பின் ஊடாக ஒருவருடத்திற்குள் சுமார் ஒருகோடியே எழுபத்தியிரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளோம். இவ்வாறான தொகையினை ஒரு அரசியல்வாதியாக இருந்தால் செய்யமுடியாது எனவே அமைப்பின் ஊடாக எமது நோக்கம் சரியான பாதையில் பயணித்துக் கொண்டு இருக்கின்றது என நான் நினைக்கின்றேன் என அவர் இதன்போது தெரிவித்தார்...
0 Comments:
Post a Comment