மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்றுப் பகுதி மின்தூக்கி பழுது, நோயாளர்களைக் காவிச் செல்வதில் ஊழியர்கள் சிரமம். அடுத்த ஒரு வாரத்தில் சீராகிவிடும் பணிப்பாளர் இப்றாலெப்பை
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்றுப் பகுதி மின்தூக்கி (லிப்ட்) கடந்த ஒரு சில தினங்களாக பழுதடைந்து விட்டதனால் பிரசவப் பெண்கள், மற்றும் சத்திர சிகிச்சைக்குரிய நேயாளர்களை மேல்மாடிக்கு காவிச் செல்வதில் ஊழியர்கள் மிகவும் சிரமப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மின்தூக்கி சுமார் 40 வருடங்கள் பழமை வய்ந்தது எனவும் அதன் பழமை தேய்மானம் காரணமாக அது அடிக்கடி பழுதடைவதாகவும் நோயாளர்களும் ஊழியர்களும் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில நாட்களாக மின்தூக்கி பழுதடைந்துள்ளதால் மேல்மாடியிலுள்ள நோயாளர்களை கீழ்த்தளத்திற்கும் சத்திர சிகிச்சை செய்யப்பட்ட நோயாளர்களை மேல்மாடிக்கும் படிகளில் கொண்டு செல்கின்றபோது பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.
இது பற்றி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எம்.எஸ். இப்றாலெப்பை கூறியதாவது@“தற்சயமம், பழுதடைந்துள்ள இந்த மின்தூக்கியின் மோட்டார் திருத்த வேலைகளுக்காக மின்தூக்கி பழுதுகள் திருத்தும் கம்பனிக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஒரு வார காலத்துக்குள் மின்தூக்கி பழுதுபார்க்கப்பட்டு சேவைக்காக மீண்டும் இயங்கத் தொடங்கும். அதுவரையில், நோயாளர்களை காவிச் செல்வதற்கு மாற்று ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது” என்றார்.
0 Comments:
Post a Comment