(துறையூர் தாஸன்)
கல்முனை ஆதாலை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் இரா.முரளீஸ்வரன் ஆலோசணைகளுக்கும் வழிகாட்டலுக்கும் அமைய உலக இருதயதினத்தை (செப்டெம்பர் 29) சிறப்பிக்கும் வகையில் சுகாதார கல்விப்பிரிவு மற்றும் மருத்துவப் பிரிவினால்
ஒழுங்குசெய்யப்பட்ட செயலமர்வானது வியாழக்கிழமை (29)கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையின் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
உங்களது இதயத்தை சக்தியுள்ளதாக மாற்றுவோம் எனும் தொனிப்பொருளை வெளிப்படுத்தும் செயலமர்வானது கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையின் பொதுவைத்திய நிபுணர் டாக்டர் ஜெயந்த விஜயரூபவினால், நடாத்தப்பட்டது.
இந்நிலையில் இதன்போது சுகாதாரக் கல்விப் பிரிவினால் அதுசார்ந்த துண்டுப பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
Power Your Heart எனும் தலைப்பினாலானகலந்துரையாடலில் கருத்தரங்கில் விசேடவைத்தியநிபுணர்கள், வைத்திய அதிகாரிகள், உள்ளக பயிற்சி வைத்தியர்கள், தாதியபரிபாலகி, தாதிய கோதரிகள், தாதிய உத்தியோகத்தர்கள் நிர்வாக உத்தியோகத்தர் பொதுமுகாமைத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட
பலர் இதன்போது பங்குபற்றி அவர்களது கருத்துக்களையும் ஐயங்களுக்கான தெளிவினையும் பெற்றுக்கொண்டனர்.
0 Comments:
Post a Comment