அம்பாறை மாவட்டம் சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவு மல்வத்தைப்
பிரதேசத்தில் ஞாயிற்றக்கிழமை (செப்ரெம்பெர் 04, 2016) பகல் இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பஸ்தரின் தலை துண்டாகிய நிலையில் ஸ்தலத்திலேயே அவர் மரணித்து விட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வரிப்பத்தான்சேனைக் கிராமத்தைச் சேர்ந்த முஹம்மத் பயாஸ் (வயது 33) என்பவரே விபத்தில் சிக்கி மரணித்தவராகும்.
மோட்டார் சைக்கிளும் டிப்பர் வாகனமும் மோதியே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் முஹம்மத் பயாஸ் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து சம்மாந்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

0 Comments:
Post a Comment